/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மருத்துவமனைக்கு கடித்த பாம்புடன் வந்த தொழிலாளி
/
மருத்துவமனைக்கு கடித்த பாம்புடன் வந்த தொழிலாளி
ADDED : செப் 24, 2025 03:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே உலகம்பட்டியைச் சேர்ந்தவர் பீட்டர் 42. கூலித்தொழிலாளி. இவர் நேற்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவரை கட்டுவிரியன் பாம்பு கடித்தது. இதையடுத்து அவர் சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பாம்பை அடித்தனர். பின்னர் பீட்டரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது பீட்டர் கடித்த பாம்பை டாக்டரிடம் காண்பிக்க கொண்டு வந்து இருந்தார். அதை கண்ட மருத்துமவனை ஊழியர்கள் அதிர்ச்சியுற்றனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.