நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்தூர்: கூம்பூர் எஸ்.புதூரை சேர்ந்த நூற்பாலை தொழிலாளி பிரகாஷ் 50. இவர் கரூர் திண்டுக்கல் நெடுஞ்சாலையில், கல்வார்பட்டி செக்போஸ்ட் அருகே டூவீலரில் சென்றபோது, இவருக்கு பின்னால் வந்த கார் மோதியது.
தலையில் படுகாயம் அடைந்த பிரகாஷ் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தேனி மாவட்டம், கடமலைக்குண்டு, தர்மாபுரியை சேர்ந்த கார் டிரைவர் சுதந்திரகுமார் 34, என்பவர் மீது, கூம்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

