ADDED : ஆக 14, 2026 06:31 PM
அ நிறம் | அளவு
வடமதுரை, ஆக.15-
திண்டுக்கல் அருகே முத்தழகுபட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜேந்திரன் 65.
நேற்று முன்தினம் தாமரைப்பாடி பகுதிக்கு வேலைக்கு சென்றார். பின்னர் ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடந்தார். அப்போது அவ்வழியே சென்ற கார் மோதியதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலே இறந்தார். விபத்து ஏற்படுத்திய காரை வடமதுரை எஸ்.ஐ., பாண்டியன் தேடி வருகிறார்.
