UPDATED : நவ 23, 2026 04:15 PM
ADDED : நவ 23, 2026 04:12 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்:
கூவக்காபட்டி ஊராட்சி வெரியம்பட்டி கட்டடத் தொழிலாளி செல்வமுருகன் 50.
இவர் தனது பேத்தி யுகஸ்ரீயுடன் 3, வேடசந்துார் நோக்கி டூவீலரில் சென்றார். பின்னால் வந்த கார் இவர்களது டூவீலர் மீது மோதியது. இவ்விபத்தில் தாத்தா, பேத்தி இருவரும் காயம் அடைந்த நிலையில் அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே செல்வமுருகன் இறந்தார். யுவஸ்ரீ திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கூம்பூர் எஸ்.ஐ., பாலசுப்பிரமணி விசாரிக்கிறார்.
