UPDATED : ஆக 18, 2026 10:26 PM
ADDED : ஆக 18, 2026 10:10 PM
அ நிறம் | அளவு
நத்தம்:திருச்சி மாவட்டம் மருங்காபுரியை சேர்ந்தவர் பொன்னன் 40. மதுரையில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை மருங்காபுரியில் உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு டூவீலரில் சென்றுவிட்டு மீண்டும் நத்தம் வழியாக மதுரைக்கு சென்று கொண்டிருந்தார்.
வத்திபட்டி பேட்டைக்குளம் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் ரோட்டோர தடுப்பில் மோதியது. இவ்விபத்தில் பொன்னன் சம்பவ இடத்திலேயே இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
