
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்,: -நத்தம் ஆவிச்சிபட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி செல்லப்பாண்டி 28. இவரது அண்ணன் மருதுபாண்டி என்பவரது மகள் பாண்டிலெட்சுமி, பிப்.13-ல் உடல் நலக் குறைவால் இறந்தார்.
இதனால் மனமுடைந்த செல்லப்பாண்டி பிப்.13ல் பூச்சி மருந்து விஷத்தை குடித்தார். நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்லப்பாண்டி இறந்தார். இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரிக்கிறார்.

