தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/உலக வங்கி வல்லுநர் குழுவினர் ஆய்வு

உலக வங்கி வல்லுநர் குழுவினர் ஆய்வு

உலக வங்கி வல்லுநர் குழுவினர் ஆய்வு


ADDED : மார் 04, 2024 07:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2024 07:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: வாழ்ந்து காட்டுவோம் திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்துார், வத்தலகுண்டு, குஜிலியம்பாறை, கொடைக்கானல், பழநி, வேடசந்துார்,ஒட்டன்சத்திரம் ஆகிய 7 ஒன்றியங்களில் 148 ஊராட்சிகளில் நடக்கிறது.

இத்திட்ட செயல்பாடுகளை பார்வையிட உலக வங்கி வல்லுனர் குழு திண்டுக்கல் வந்தனர். அய்யங்கோட்டையில் நடக்கும் சமுதாயத் திறன் பள்ளியில் மண்புழு உரம் தயாரித்தல் பணியை பார்வையிட்டனர். இதேபோல் கோட்டநத்தத்தில் உள்ள தையல் தொழில் குழு,அய்யம்பாளையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்,மதி சிறகுகள் தொழில் மையம்,குளத்துப்பட்டி சமுதாய பண்ணை பள்ளி உள்ளிட்ட இடங்களில் பார்வையிட்டு தொழில் முனைவோர்களிடம் கலந்துரையாடினர். மாநில வாழ்ந்து காட்டுவோம் திட்டம் இணை இயக்குநர் பாபு, மகளிர் திட்ட இயக்குநர் சரவணன், மாவட்ட செயல் அலுவலர் சுதாதேவி, நிதி ஆலோசகர் தர்ஸன் மற்றும் ராஜேஷ்குமார் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us