நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஹாட்புல்னெஸ் அமைப்பு சார்பில் உலக அமைதி தினவிழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் சாவித்திரி தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க தலைவர் குப்புசாமி முன்னிலை வகித்தார்.
செயின்ட் மேரிஸ் பள்ளி பாதிரியார் மரிவளன்,பிரம்ம குமாரிகள் அமைப்பை சேர்ந்த சிவ சுப்பிரமணியன்,டாக்டர் அமலாதேவி,அறிவுத்திருக்கோயில் பேராசிரியர் மதிவாணன்,வள்ளலார் சன்மார்க்கத்தை சேர்ந்த அருணகிரி,பாதிரியார்கள் வில்லியம்ஸ்,ஜோசப் பங்கேற்றனர். ஹாட்புல்னெஸ் அமைப்பு மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

