ADDED : மார் 24, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பாரதமாதா பவுண்டேஷன், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, பி.வி.பி., கலை,அறிவியல் கல்லுாரி சார்பில் உலக சாதனை ரத்ததான முகாம் திண்டுக்கல் பிச்சாண்டி மகாலில் நடந்தது. திண்டுக்கல் எம்.பி.,சச்சிதானந்தம் தலைமை வகித்தார்.
மேயர் இளமதி தொடங்கி வைத்தார். அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மருத்துவ அலுவலர் சரண்யா ரத்ததான கொடையாளர்களை சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் ,மாதிரிகளை பரிசோதனை செய்த பின்னர் ரத்த தானம் பெற்றனர்.
70க்கு மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர். பாரதமாதா பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தகுமார், பி.வி.பி., கல்லுாரி தாளாளர் செல்வகுமார், பேராசிரியர் கருப்பம்மாள், கவுரவ ஆலோசகர் காளிதாஸ் ஏற்பாடுகளை செய்தனர். தலைமை ஒருங்கிணைப்பாளர் இந்திரகுமார் நன்றி கூறினார்.