/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உலக சுற்றுலா தின மாரத்தான் போட்டி
/
உலக சுற்றுலா தின மாரத்தான் போட்டி
ADDED : செப் 28, 2024 04:41 AM

கொடைக்கானல் : கொடைக்கானலில் உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடந்தது. நகராட்சி படகு குழாமில் துவங்கி பிரியன்ட் பூங்கா வரை நடந்த இதை சமூக பாதுகாப்பு தாசில்தார் கண்ணன் துவக்கி வைத்தார்.
இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ், உதவி சுற்றுலா அலுவலர் சுதா, பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து தெரசா பல்கலையில் சுற்றுலா மற்றும் அமைதி குறித்த கருத்தரங்கம் நடந்தது. பல்வேறு போட்டிகள் நடந்தன. தெரசா பல்கலை துணை வேந்தர் கலா, வானியியல் மைய தலைமை விஞ்ஞானி ராஜலிங்கம், தங்கும் விடுதிகள் சங்க தலைவர் அப்துல் கனி ராஜா, பேராசிரியர் கீதா கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.