/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இறைச்சியில் புழுக்கள்; போலீசில் புகார்
/
இறைச்சியில் புழுக்கள்; போலீசில் புகார்
ADDED : ஏப் 07, 2025 06:12 AM
வடமதுரை : வடமதுரை இறைச்சிக்கடையில் வாங்கிய ஆட்டுக்கால் புழுக்களுடன் இருந்ததால் தொழிலாளி போலீசில் புகார் அளித்தார்.
மோர்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி கிருஷ்ணக்குமார் 30. நேற்று மதியம் காணப்பாடி ரோடு இறைச்சிக்கடையில் ஆட்டுக்கால்கள் வாங்கியுள்ளார். சமையலுக்காக ஆட்டுக்காலை வெட்டியபோது புழுக்கள் இருந்ததுள்ளது. இறைச்சிக்கடைக்கு சென்று கேட்டதற்கு முறையாக பதில் தராமல் அலட்சியமாக இருந்தனர். இதனால், கிருஷ்ணகுமார் ஆட்டுக்காலுடன் வடமதுரை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் அளித்ததால் அலுவலர் ராமசாமி புகாருக்குள்ளான இறைச்சியில் ஆய்வு நடத்தி, கடையை மூடினார். சில இறைச்சி கடைகளில் இறந்த ஆடுகளை குறைந்த விலைக்கு வாங்கி விற்கின்றனர். மாட்டு இறைச்சி கலப்பட புகாரும் வருகிறது. கவனத்துடன் இருக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர்.

