/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருஆவினன்குடி கோயிலில் யாகசாலை பணி துவக்கம்
/
திருஆவினன்குடி கோயிலில் யாகசாலை பணி துவக்கம்
ADDED : நவ 22, 2025 03:37 AM

பழநி: பழநி திருஆவினன்குடி கோயிலில் டிச. 8 ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பழநி முருகன் கோயில் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த ஆகம விதிகளில் உள்ளது.
இதில் பழநி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் 2014 செப். 7 ல் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், இங்கு கும்பாபிஷேகம் நடத்த கோயில்களின் பழமை தன்மை மாறாமல் தொல்லியல் துறையிடம் முறையான அனுமதி பெற்று திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
டிச. 8 ல் கும்பாபிஷேகம் நடப்பதால் இதற்கான முகூர்த்த கால் நடும் பணி நவ.5 ல் நடந்தது.
இதை தொடர்ந்து யாகசாலை பணிகள் கோயிலின் முன் , பின் பகுதியில் நடைபெற்று வருகின்றன. இதில் 21 யாக குண்டங்களும் அமைக்கப்பட உள்ளன.

