நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் அறிவுத்திருக்கோயில் சார்பில் ஸ்ரீஅமோகம் மருத்துவமனை, செல்வ விருட்சகம் கருத்தரித்தல் மையம், ஸ்மைல் டென்டல் ெஹல்த்கேர் ஊழியர்கள், கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
மருத்துவமனை தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். டாக்டர்கள் பெருமாள், செல்வராணிஜெயராமன் முன்னிலை வகித்தனர்.
அறிவுத்திருக்கோயில் பேராசிரியர் தாமோதரன் தலைமையில் ஆசிரியர்கள் மதிவாணன், சங்கரேஸ்வர் யோகா பயிற்சி அளித்தனர்.
டாக்டர் ஆயிஷா மருத்துவமனை ஊழியர் கேத்ரின் பேசினார். மக்கள் தொடர்பு அதிகாரி மாரிமுத்து நன்றி கூறினார். திண்டுக்கல் அரவிந்த் கண் மருத்துவமனை, கொல்லப்பட்டி அரசுப்பள்ளி, எஸ்.எஸ்.எம்., மெட்ரிக் பள்ளி, சன்சாக் இன்டஸ்டீரியிலும் அறிவுத்திருக்கோயில் சார்பில் மனவளக்கலை யோகா பயிற்சி தரப்பட்டது.