/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை
/
திண்டுக்கல் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை
ADDED : அக் 28, 2025 04:10 AM
திண்டுக்கல்: தாடிக்கொம்பு செல்லமந்தாடி ரயில்வே பாலம் அருகே 25 வயது பெண் கழுத்து, முகம், வாய், கையில் வெட்டுப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப், ரூரல் டி.எஸ்.பி., சங்கர், தாடிக்கொம்பு இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
இதில் இறந்து கிடந்தவர் சீலப்பாடியை சேர்ந்த செல்வராஜ் மகள் மீனாட்சி 25, என்பது தெரிந்தது. போலீஸ் விசாரணையில் நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றவர் ஆண் நண்பர் ஒருவருடன் செல்லமந்தாடி பாலம் பகுதிக்கு வந்தபோது அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது. மீனாட்சி உடன் வந்தவர் யார் என்பது குறித்து போலீஸ் விசாரிக்கின்றனர்.

