/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெண் படத்தை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் கைது
/
பெண் படத்தை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் கைது
ADDED : நவ 16, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: துாத்துக்குடியை சேர்ந்த டிரைவர் ஆனந்த் 40. இவர் சமூக வலைத்தளக் கணக்குகளில் இருந்து இளம்பெண்கள், திருமணம் ஆன பெண்களின் புகைப்படத்தை முறைகேடாக பதிவிறக்கம் செய்து அதை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த 35 வயது பெண், திண்டுக்கல் எஸ்.பி .,பிரதீப்பிடம் புகார் அளித்தார். ஏ.டி.எஸ்.பி.,தெய்வம், இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்துமேரி விசாரணை நடத்தி, ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

