/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுற்றுலா பயணிகள் வாகனத்தை துரத்திய யானை
/
சுற்றுலா பயணிகள் வாகனத்தை துரத்திய யானை
ADDED : நவ 16, 2025 01:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி - கொடைக்கானல் ரோட்டில் யானை நடமாட்டம் அடிக்கடி உள்ள பகுதிகளில் வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
யானைகளால் வாகனங்களுக்கும் இதுவரை எந்தவித தொந்தரவும் ஏற்பட்டதில்லை. இந்நிலையில் ஒற்றை யானை பழநி- - கொடைக்கானல் ரோட்டில் செல்லும் போது எதிரே வந்த சுற்றுலா வாகனத்தில் இருந்து படம் பிடிக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
இதில் யானை ரோட்டிலிருந்து தடுப்பை உடைத்து காட்டுப் பகுதிக்குள் செல்லும்போது சுற்றுலா வாகனம் அதனை கடந்து செல்ல முயன்றது.
அப்போது யானை சிறிது தூரம் துரத்தி வருவது போன்ற காட்சிகள் உள்ளன. வாகனத்தில் இருப்பவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

