ADDED : மே 19, 2025 04:47 AM
சாணார்பட்டி : நத்தத்தில் 10ம் வகுப்பு மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்முறையில் ஈடுபட்டு, தலைமறைவாக இருந்த இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
நத்தம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி வினோத் 22. திருமணமான இவர் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியுடன் நட்பு ஏற்படுத்தி ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். மாணவியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து பெற்றோர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்சென்றனர்.
அப்போது மாணவி கர்ப்பமாகி இருந்தது உறுதியானது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து கேட்டபோது கர்ப்பத்துக்கு வினோத் என்பவர் காரணம் என மாணவி கூறினார்.
தொடர்ந்து, பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வினோத்தை தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, எஸ்.ஐ., முனியம்மா தலைமையிலான தனிப்படை போலீசார் வினோத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.