ADDED : மார் 18, 2025 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தின் சார்பாக இளைஞர் தினவிழா,வர்த்தகக் கண்காட்சி, மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
பொறியியல் கல்லுாரி முதல்வர் கார்த்திகைபாண்டியன், கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் தேவி, பாலிடெக்னிக் முதல்வர் ஆனந்த், நர்சிங் முதல்வர் அன்னலெட்சுமி பங்கேற்றனர்.
போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசு, சான்றிதல் வழங்கப்பட்டது.
போட்டியில் என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி மேலாண்மைத்துறை, கலை அறிவியல் கல்லுாரியில் தகவல் தொழில் நுட்பத் துறை,இயந்திரவியல் துறை, நர்சிங் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.