/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தொழிலாளி கொலையில் வாலிபருக்கு ஆயுள்
/
தொழிலாளி கொலையில் வாலிபருக்கு ஆயுள்
ADDED : டிச 05, 2024 04:07 AM
திண்டுக்கல்: வடமதுரை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கூலித்தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வடமதுரை எரியோடு எலப்பார்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்புசாமி 21. இவரது அண்ணன் மனைவியோடு அதே பகுதியை சேர்ந்த காமாட்சி 24, என்பவர் தகாத முறையில் பழகி வந்தார். இது தொடர்பாக 2020ல் காமாட்சியை கருப்புசாமி எச்சரித்தார். இதில் ஏற்பட்ட தகராறில் காமாட்சி கத்தியால் கருப்புசாமியை குத்தி கொலை செய்தார். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் காமாட்சிக்கு ஆயுள் தண்டனை,ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி முத்துசாரதா தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மகேந்திரன் ஆஜரானார்.