/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெண்களை படம் எடுத்த இளைஞர்கள் மறியல்
/
பெண்களை படம் எடுத்த இளைஞர்கள் மறியல்
ADDED : ஜன 20, 2024 05:23 AM
எரியோடு: தொட்டணம்பட்டியில் இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்களை படம் எடுத்த இளைஞர் தாக்கியது தொடர்பாக இரு தரப்பினர் மோதி கொண்டனர். இதில் பாதிக்கப்பட்ட மக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
எரியோடு தொட்டணம்பட்டி திண்டுக்கல் ரோட்டோரம் இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்களை 3 இளைஞர் படம் எடுத்ததாக பிரச்னை ஏற்பட்டது. இவர்களில் இருவர் தப்ப ஒருவரை பிடித்து தர்ம அடி தந்து போலீசில் ஒப்படைத்தனர். ஆத்திரமான அந்த இளைஞரின் உறவினர்கள் ஒன்று கூடி மற்றொரு தரப்பினர் மீது தாக்குதல் நடத்தினர். இருவர் காயம் அடைந்தனர். சில வாகனங்களும் சேதமானது. இதனால் அதிருப்தியான மக்கள் திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். இதையடுத்து எரியோடு போலீசார், 'தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' எனக்கூற கலைந்தனர். அப்பகுதியில் மீண்டும் பிரச்னை ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.