/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆதி தமிழர் முன்னேற்ற கழக நிர்வாகிஉள்பட மூவர் மிரட்டல் புகாரில் கைது

ADDED : பிப் 26, 2025 01:10 AM
ஆதி தமிழர் முன்னேற்ற கழக நிர்வாகிஉள்பட மூவர் மிரட்டல் புகாரில் கைது
கோபி, :ஆதி தமிழர் முன்னேற்றக்கழக நிர்வாகி, மிரட்டல் புகாரில் கைது செய்யப்பட்டார்.கோபி அருகே வரப்பள்ளத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 43; டி.என்.பாளையத்தில் செயல்படும் வி.என்.கே., ஜல்லி கிரசரில் டிப்பர் லாரி டிரைவராக பணிபுரிகிறார்.
முறையான அனுமதியுடன், மூன்று யூனிட் கருங்கற்களை லாரியில் ஏற்றி கொண்டு, கோபி அருகே நஞ்சகவுண்டம்பாளையம்
பகுதியில், நேற்று முன்தினம் மாலை வந்தார். லாரியை வழிமறித்த மூவர், மூர்த்தியை இறங்க செய்துள்ளனர். 'லாரியில் என்ன லோடு?' என கேட்டுள்ளனர். 'கருங்கற்கள் ஏற்றி செல்கிறேன்' என்று மூர்த்தி தெரிவித்த நிலையில், தகாத வார்த்தை பேசியுள்ளனர்.
மேலும் 'திருட்டுத்தனமாக லாரியில் மண் ஓட்டுகிறாயா, உனது முதலாளிக்கு போன் போட்டு, ஒரு லட்சம் ரூபாய் கொண்டு வர சொல். இல்லையேல் லாரியுடன் கொளுத்தி விடுவோம்' என்று மிரட்டியதாக, மூவர் மீதும் கோபி போலீசாரில், மூர்த்தி புகாரளித்தார். இதன்படி யுவராஜ், 46, சதீஸ், 34, பவானியை சேர்ந்த தர்மலிங்கம், 39, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதில் யுவராஜ், ஆதித்தமிழர் முன்னேற்ற கழக புறநகர் மாவட்ட செயலாளர், சதீஸ் ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்தவர், தர்மலிங்கம் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர் எனவும் போலீசார் தெரிவித்தனர்.