/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'சாயக்கழிவு பிரச்னைக்கான சி.இ.டி.பி., அமைக்க இன்னும் ஆய்வு'வழக்கம்போல அமைச்சர் முத்துசாமி மழுப்பல்
/
'சாயக்கழிவு பிரச்னைக்கான சி.இ.டி.பி., அமைக்க இன்னும் ஆய்வு'வழக்கம்போல அமைச்சர் முத்துசாமி மழுப்பல்
'சாயக்கழிவு பிரச்னைக்கான சி.இ.டி.பி., அமைக்க இன்னும் ஆய்வு'வழக்கம்போல அமைச்சர் முத்துசாமி மழுப்பல்
'சாயக்கழிவு பிரச்னைக்கான சி.இ.டி.பி., அமைக்க இன்னும் ஆய்வு'வழக்கம்போல அமைச்சர் முத்துசாமி மழுப்பல்
ADDED : மார் 13, 2025 02:04 AM
'சாயக்கழிவு பிரச்னைக்கான சி.இ.டி.பி., அமைக்க இன்னும் ஆய்வு'வழக்கம்போல அமைச்சர் முத்துசாமி மழுப்பல்
ஈரோடு:''பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு (சி.இ.டி.பி.,), ஏற்கனவே, 2, 3 விதமாக திட்டமிட்டு, அவை ஒவ்வொன்றும் வெற்றிகரமாக நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதுபற்றி, விரிவான ஆய்வு செய்து வருகின்றனர். அந்த ஆய்வின் முடிவு வந்த பின், நடவடிக்கை எடுக்கப்படும்,'' அமைச்சர் முத்துசாமி, வழக்கமான பதிலை தெரிவித்தார்.
ஈரோடு, அகில்மேடு வீதியில் தனியார் கட்டடத்தில், கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வின் அலுவலக திறப்பு விழா நடந்தது. எம்.எல்.ஏ., சந்திரகுமார் வரவேற்றார். அலுவலகத்தை திறந்து வைத்த பின், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:
பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு (சி.இ.டி.பி.,), ஏற்கனவே, 2, 3 விதமாக திட்டமிட்டு, அவை ஒவ்வொன்றும் வெற்றிகரமாக நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதுபற்றி, விரிவான ஆய்வு செய்து வருகின்றனர். பெருந்துறை சிப்காட்டில், 40 கோடி ரூபாயில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு திட்டமிட்டு, 56 கோடி ரூபாயில் நிறைவேற்ற பணி நடக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் துவங்க உள்ளனர். பணி துவங்கும் நிலையில், சட்டப்பூர்வமான, தொழில் நுட்ப ரீதியான சிக்கல்கள் வருவதால் தாமதம் ஏற்படுகிறது. டி.டி.எஸ்., மீட்டர், இரு இடங்களில் அமைக்க பொதுமக்கள் கேட்டதால், அதை அமைக்கும் பணியும் நடக்கிறது. இவ்வாறு கூறினார்.
மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.இதை தொடர்ந்து, கருங்கல்பாளையத்தில் ஏற்கனவே இருந்த காந்தி சிலையை, வெண்கல சிலையாக மாற்றம் செய்து, சாலை ஓரமாக அமைக்கப்பட்டதையும், அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.
சென்டிமென்ட் பிரச்னைஈரோடு, சூரம்பட்டி நான்கு ரோடு அருகே கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை பயன்படுத்திய என்.கே.கே.பெரியசாமி, என்.கே.கே.பி.
ராஜா ஆகியோர் அரசியலில் இருந்து ஒதுங்கினர்.
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு, கடும் உடல் நலக்குறைவுக்கு பின் நலம் பெற்றார்.
தற்போதை ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார், 2011 ல், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வில் வென்று, மூன்றரை ஆண்டுகள், 'சஸ்பெண்ட்' உள்ளிட்ட நடவடிக்கையால் தவித்து, அக்கட்சியை விட்டே வெளியேறி, தி.மு.க.,வில் இணைந்து தற்போது எம்.எல்.ஏ., ஆனார். கடந்த, 2021ல் திருமகன் ஈவெராவும், 2023ல் இளங்கோவனும் எம்.எல்.ஏ.,வாகி உடல் நலக்குறைவால் இறந்தனர். எம்.எல்.ஏ., அலுவலகத்தை பயன்படுத்தியவர்கள் அடுத்தடுத்து பாதிப்புக்குள்ளானதால், 'சென்ட்டிமென்ட ்'டாக, அந்த அலுவலகத்துக்கு செல்லாமல் தனியார் வாடகை கட்டடத்தில் சந்திரகுமார் அலுவலகம் திறந்துள்ளார். 'அந்த அலுவலகத்துக்கு செல்லாமல், தனியாக அலுவலகம் திறந்துள்ளீர்களே' என கேட்டபோது, அமைச்சர் முத்துசாமி குறுக்கிட்டு, ''அதுபற்றி இப்போது பேச வேண்டாம். நாளை (இன்று) ஒரு ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. அதன்
பின் தெரிவிப்பார்,'' என்றார்.