/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
௯௩வது நினைவு தினம் கொடிகாத்த குமரனுக்கு சர்வ கட்சியினர் அஞ்சலி
/
௯௩வது நினைவு தினம் கொடிகாத்த குமரனுக்கு சர்வ கட்சியினர் அஞ்சலி
௯௩வது நினைவு தினம் கொடிகாத்த குமரனுக்கு சர்வ கட்சியினர் அஞ்சலி
௯௩வது நினைவு தினம் கொடிகாத்த குமரனுக்கு சர்வ கட்சியினர் அஞ்சலி
ADDED : ஜன 12, 2025 01:09 AM
சென்னிமலை,:சென்னிமலையில் பிறந்து நாட்டின் விடுதலை போராட்டத்தில் தனது உயிரை தியாகம் செய்த, கொடிகாத்த குமரனின், 93வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி சென்னிமலையில் உள்ள குமரன் சிலைக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மாரியதை செய்தனர்
அ.தி.மு.க., சார்பில் ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன்; தி.மு.க., சார்பாக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன்; சென்னிமலை தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் ஒன்றிய பொது செயலாளர் சுந்தரராசு; காங்., சார்பாக சென்னிமலை வட்டார தலைவர் கவின்குமார்; கொடிகாத்த தியாகி குமரன் பேரவை சார்பாக பேரவையின் தலைவர் ஐயப்பன்; கொமதேக சார்பில் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அம்மன் பாலு; தே.மு.தி.க., சார்பாக மணி தலைமையிலான நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில்லாமல் பல்வேறு அமைப்பினரும், குமரனுக்கு மரியாதை செலுத்தினர்.