/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிற அமைச்சர்கள் ஓட்டு கேட்க வர மாட்டார்கள்பிரசாரத்தில் அமைச்சர் முத்துசாமி தகவல்

ADDED : ஜன 29, 2025 01:27 AM
பிற அமைச்சர்கள் ஓட்டு கேட்க வர மாட்டார்கள்பிரசாரத்தில் அமைச்சர் முத்துசாமி தகவல்
ஈரோடு, :''ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு பிற அமைச்சர்கள் வரப்போவதில்லை,'' என, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.
தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர், நிருபர்களிடம் கூறியதாவது:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை, மக்கள் பிரச்னைகளை தெரிந்து நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக எடுத்துள்ளோம். வெளியூர் அமைச்சர்கள் வேண்டாம். உள்ளூர் கட்சிக்காரர்களை வைத்து வேலை செய்ய தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
மக்களை தேடி மருத்துவம் திட்டம் கேட்பவர்களுக்கு ஒரு மாதிரியாக இருக்கலாம். நேரில் பார்த்தால் தான் அருமை புரியும். காலை உணவு திட்டம் தேர்தலுக்காக, ஓட்டுக்காக போடப்பட்டது அல்ல. இத்திட்டத்தை பற்றி குற்றம் சொல்பவர்கள் மனசாட்சியை தொட்டு சொல்லவேண்டும். அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் தேர்தலுக்காக, அரசியலுக்காக என நினைத்தால் அப்படித்தான் இருக்கும்.அடிப்படையை ஆராய்ந்து பார்த்தால்தான் தெரியும். சீமான் மட்டுமல்ல யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.