/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோ---ஆப்டெக்ஸ் ஊழியர் சார்பில்முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு
/
கோ---ஆப்டெக்ஸ் ஊழியர் சார்பில்முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு
கோ---ஆப்டெக்ஸ் ஊழியர் சார்பில்முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு
கோ---ஆப்டெக்ஸ் ஊழியர் சார்பில்முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு
ADDED : ஜன 31, 2025 01:28 AM
சென்னிமலை :கோ--ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்துள்ள, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, கோ--ஆப்டெக்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்க பொது செயலாளர் அன்பழகன் பாராட்டு தெரிவித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோ---ஆப்டெக்ஸ் நிறுவனம் கடந்த நான்காண்டுகளாக விற்பனையில் முன்னேற்றம் கண்டு, தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது. இந்தாண்டில், 18 கோடி ரூபாய்க்கு விற்பனை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில், 9.50 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. 90 ஆண்டு கால கோ--ஆப்டெக்ஸ் வரலாற்றில், பணியாளர்களுக்கு அதிகபட்சம், 11 சதவீத ஊதிய உயர்வே வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஜூலை, 2023 முதல் முன் தேதியிட்டு, 14.6 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களுக்கு மாதம் குறைந்தபட்சம், 5,000 ரூபாய் முதல் அதிகபட்சம், 27,000 ரூபாய் வரை கூடுதலாக ஊதிய உயர்வு கிடைக்கவுள்ளது.
ஊதிய உயர்வு, இதர நிதிப்பயன் வழங்கி உத்தரவிட்ட முதல்வர், நிதித்துறை அமைச்சர், கைத்தறி துறை அமைச்சர் ஆகியோருக்கு, எங்கள் சங்கம் சார்பில் நன்றி. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.