/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓடையில் ஆலை கழிவு நீர் கலந்த நிறுவனம்நடவடிக்கை கோரி பேரூராட்சி தலைவர் மனு
/
ஓடையில் ஆலை கழிவு நீர் கலந்த நிறுவனம்நடவடிக்கை கோரி பேரூராட்சி தலைவர் மனு
ஓடையில் ஆலை கழிவு நீர் கலந்த நிறுவனம்நடவடிக்கை கோரி பேரூராட்சி தலைவர் மனு
ஓடையில் ஆலை கழிவு நீர் கலந்த நிறுவனம்நடவடிக்கை கோரி பேரூராட்சி தலைவர் மனு
ADDED : மார் 25, 2025 12:48 AM
ஓடையில் ஆலை கழிவு நீர் கலந்த நிறுவனம்நடவடிக்கை கோரி பேரூராட்சி தலைவர் மனு
ஈரோடு:நசியனுார் பேரூராட்சி தலைவர் மோகனப்பிரியா (தி.மு.க.,), ஈரோடு எஸ்.பி., ஜவகரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நசியனுார் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆட்டையாம்பாளையம் பகுதி கீழ்பவானி வாய்க்கால் ஓடையில், சிப்காட்டில் இயங்கும் ஆர்.கே.ஸ்டீல்ஸ் உரிமையாளர் அபிஷேக், மக்கள் மற்றும் உயிரினங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தும் என தெரிந்தே ஆலை கழிவை கலக்க செய்துள்ளார். இதனால் நீரின் தன்மை முழுமையாக மாசடைந்து, பயிர்கள் நாசமாகி, விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஆர்.கே.ஸ்டீல்ஸ் உரிமையாளர் அபிஷேக், குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இதுபோன்ற செயல்களை பலமுறை செய்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இருந்த கலெக்டர், இந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இம்மனுவில் பேரூராட்சியில் உள்ள, 15 வார்டு கவுன்சிலர்களும் கையெழுத்து போட்டுள்ளனர்.
உள்ளூர் வர்த்தக செய்திகள்
* ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா, சிறுவலுார் பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில் கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. தென்னங்கருப்பட்டி, 200 கிலோ வரத்தாகி, கிலோ 160 ரூபாய், பனங்கருப்பட்டி, 600 கிலோ வரத்தாகி, கிலோ 180 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் தென்னங்கருப்பட்டி, கிலோவுக்கு நான்கு ரூபாய் விலை கூடியது. பனங்கருப்பட்டி கிலோவுக்கு பத்து ரூபாய் விலை சரிந்தது. வரத்தான அனைத்து கருப்பட்டியும், 1.40 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று வேளாண் விளைபொருள் ஏலம் நடந்தது. ஏலத்துக்கு, 5,181 தேங்காய் வரத்தானது. ஒரு காய், 21-47 ரூபாய்; 37 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி கிலோ, 166-176 ரூபாய்; ஒரு மூட்டை துவரை வரத்தாகி, கிலோ 45 ரூபாய்; நான்கு மூட்டை கொள்ளு வரத்தாகி கிலோ, 30-45 ரூபாய்; ஒரு மூட்டை நரிப்பயறு வரத்தாகி கிலோ, 66-82 ரூபாய்; ஒன்பது மூட்டை எள் வரத்தாகி கிலோ, 126-132 ரூபாய்க்கும் விற்பனையானது.
* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 22,227 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 54.25 முதல், 66.19 ரூபாய் வரை விற்பனையானது. 7,083 கிலோ தேங்காய், 4.௦௮ லட்சம் ரூபாய்க்கு விற்றது.