/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலையில் 'அரோகரா' கோஷம் முழங்க தைப்பூச தேரோட்டம்
/
சென்னிமலையில் 'அரோகரா' கோஷம் முழங்க தைப்பூச தேரோட்டம்
சென்னிமலையில் 'அரோகரா' கோஷம் முழங்க தைப்பூச தேரோட்டம்
சென்னிமலையில் 'அரோகரா' கோஷம் முழங்க தைப்பூச தேரோட்டம்
ADDED : பிப் 02, 2026 06:05 AM

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச தேரோட்டம், கந்தனுக்கு 'அரோகரா'
பக்தி கோஷம் விண்ணதிர நேற்று கோலாகலமாக நடந்தது.
உலகம் முழுவதும் முருகன் கோவில்களில், தைப்பூச திருவிழா வழக்கமான உற்சா-கத்துடன் நேற்று கொண்டாடப்பட்டது. ஆதி பழனி என போற்றப்படும் முருகன் கோவிலான, சென்னிமலையிலும் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது. முன்னதாக நேற்று அதி-காலை, 3:௦௦ மணிக்கு முருகன், வள்ளி, தெய்வா-னைக்கு சிறப்பு அபிஷேகம், 5:50 மணிக்கு கைலாச
நாதர் கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. தேர்நிலையை சுவாமி, 6:00 மணிக்கு அடைந்தது. பின் உற்சவ மூர்த்திகள் தேரை மூன்று முறை வலம் வந்து, 6:10க்கு மூன்று தேர்களில் வைக்கப்பட்டன.
முதல் தேரில் விநாயக பெருமான், பெரிய தேரில் தம்பதி சமேத முருகப்பெருமான் தங்க கவச அலங்காரத்தில், மூன்றாம் தேரில் நடராஜர் சமே-தராக எழுந்தருளினார். கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச்சாரியார் தலை-மையில் சிறப்பு தீபாராதனையை தொடர்ந்து, 6:15 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்க-ணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். சாலையின் இருமருங்களிலும் ஆயிரக்கணக்-கானோர் குழுமியிருந்தனர். இரு தரப்பினரும் எழுப்பிய கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா கோஷம் விண்ணை முட்டியது. அசைந்தாடி வந்த தேர் மீது, வழி நெடுக திரண்டி-ருந்த
பக்தர்கள் உப்பு-மிளகு துாவியும், நிலக்
கடலை, நெல் வீசியும் வழிபட்டனர்.
காலை, 6:45 மணிக்கு தெற்கு ராஜவீதியில் தேர் நிறுத்தப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு மீண்டும் தேரோட்டம் தொடங்கி, தெற்கு, மேற்கு ரத வீதி-களில் வலம் வந்து, வடக்கு ரத வீதியில் நிறுத்-தப்பட்டது. இன்று மாலை, 5:20 மணிக்கு தேர் நிலை அடைகிறது. தேரோட்டத்தை ஒட்டி தேவஸ்தான மண்டபத்தில், தைப்பூச இசை விழா குழு சார்பாக அன்னதானம் வழங்கப்பட்-டது. பல்வேறு ஊர்களில் இருந்து நுாற்றுக்கணக்-கான பக்தர்கள் காவடி சுமந்து வந்து நேர்த்திக்-கடன் செலுத்தினர். தைப்பூச தேரோட்டத்தால் சென்னிமலை நகரமே, பக்தர்கள் கடலில் மூழ்கி-யது.
* அந்தியூர் தேர்வீதி பாலசுப்பிரமணியர் கோவிலில், தைப்பூச விழாவையொட்டி, 1,008 பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது. பத்ரகாளி-யம்மன் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க, பால்குட ஊர்வலம் துவங்கியது. ஊர்-வலம் முன் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து ஆடி வந்தனர். இதேபோல் வெள்ளித்தி-ருப்பூர் ரெட்டிபாளையம் வெள்ளிமலை முருகன் கோவில், கழுதைப்பாளி முருகன் கோவில், சங்-கராபாளையம் மடம் முருகன் கோவில்களில் தைப்பூச விழா நடந்தது.
* புன்செய்புளியம்பட்டி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், மூலவர் முருகனுக்கு, 16 வகை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பிறகு சுவாமிக்கு முழு உருவ முத்தங்கி கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது.
* ஈரோடு அருகே திண்டல் வேலாயுத சுவாமி கோவிலில், அதிகாலை முதலே முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதிகாலை, 3:௦௦ மணிக்கு துவங்கிய பாலாபிஷேகம், 5:30 மணி வரை நடந்தது. மலை அடிவாரத்தில் இருந்து சன்னதி வரை திரண்ட பக்தர்கள், நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
* பவானி பழனியாண்டவர் கோவிலில், பழனியாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, தேரோட்டம் நடந்தது. ஆப்பக்கூடல், அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி முருகன் கோவில்களில், தைப்பூச விழா விமரிசையாக நடந்தது.
* நம்பியூர் அருகே மலையப்பாளையம் உதயகிரி முத்து வேலாயுத சுவாமி கோவிலில், காலை, 7:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. எலத்துார் பொன் நாகமலை ஆண்டவர் கோவிலுக்கு, ஆயி-ரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரையாக வந்தனர். நம்பியூர் திட்டமலை குழந்தை குமாரசாமி கோவில், வேமாண்டம்பாளையம் ஸ்ரீமத் திருக்குமார சுவாமி கோவிலிலும் கொண்டாடப்பட்டது.
பவளமலையில் தேரோட்டம்
கோபி அருகே பவளமலை முத்துக்
குமாரசாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவி-ழாவில் நேற்று காலை 10:30 மணிக்கு திருக்கல்-யாண உற்சவம் நடந்தது. மலை அடிவாரத்தில் மாலை, 4:15 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. கிரிவலப்பாதை வழியாக திருத்தேர் வலம் வந்-தது. அதை தொடர்ந்து மூலவர், உற்சவருக்கு அபிேஷகம் நடந்தது.

