sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விதிமுறை மீறி குழந்தைகளை ஏற்றும் வாகனங்கள் :விபத்துக்கு முன் நடவடிக்கை எடுக்கப்படுமா?

/

விதிமுறை மீறி குழந்தைகளை ஏற்றும் வாகனங்கள் :விபத்துக்கு முன் நடவடிக்கை எடுக்கப்படுமா?

விதிமுறை மீறி குழந்தைகளை ஏற்றும் வாகனங்கள் :விபத்துக்கு முன் நடவடிக்கை எடுக்கப்படுமா?

விதிமுறை மீறி குழந்தைகளை ஏற்றும் வாகனங்கள் :விபத்துக்கு முன் நடவடிக்கை எடுக்கப்படுமா?


ADDED : ஜூலை 12, 2011 12:44 AM

Google News

ADDED : ஜூலை 12, 2011 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோட்டில் விதிமுறையை மீறி, ஆட்டோக்கள் ஒவ்வொன்றும் 15க்கும் மேற்பட்ட குழந்தைகளை திணித்து, பள்ளிக்கு அழைத்து வருகின்றன.

'டி' போர்டு இல்லாத வாகனங்களும், 'ப்ரஸ்' என, 'ஸ்டிக்கர்' ஒட்டிய வாகனங்களும் கூட, பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்கின்றன. ஈரோட்டிலும், நகரைச் சுற்றியும் 250க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் பயில்கின்றனர். நகரின் பல்வேறு இடங்களில் இருந்து, வரும் பள்ளி மாணவர்கள், பள்ளிக்கு சொந்தமான மற்றும் தனியார் பஸ், வேன், ஆட்டோக்களில் வருகின்றனர். தனியார் வாகனங்கள், மாத வாடகையாக 250 ரூபாய் முதல், தூரத்துக்கு தக்கபடி 800 ரூபாய் வரை கட்டணமாக வசூல் செய்கின்றனர். பள்ளி விடுமுறை, காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை போன்ற நாட்களுக்கு, கட்டணம் குறைப்பதில்லை. அடி மாடுகளை லாரியில் ஏற்றிச் செல்வது போல, 15க்கும் அதிகமான குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிச் செல்கின்றனர். டிரைவருக்கு அருகிலும், டிரைவரின் முதுகு அருகே பலகை வைத்தும், பின்பக்க இருக்கைக்கு மேல் பகுதியிலுமாக குழந்தைகளை அடைத்து வைத்து ஏற்றிச் செல்கின்றனர். இவற்றின் வேகத்துக்கு அளவே இல்லை. 'மாருதி ஆம்னி' வேன்கள், 'மெட்டடார்' மற்றும் 'மகேந்திரா' வேன்கள், வேன் போல வடிவமைக்கப்பட்ட, 'டாட்டா ஏஸ்' வாகனங்கள், உற்பத்தியே நிறுத்தப்பட்ட பழைய கால 'ஸ்டாண்டர்டு' வேன்கள் கூட, பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்கின்றன. இவற்றில், 'டி' போர்டு வேன்கள் சொற்பமே. அரசை ஏமாற்றி, சொந்த உபயோக வேன்கள்தான் அதிகம் பயன்படுகின்றன. இந்த வேன்களில் 35க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிச் செல்கின்றனர். பெருந்துறை ரோட்டில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாருதி 'ஆம்னி' வேன்கள் சில, பத்திரிகையாளர்கள் மட்டுமே பயன்படுத்தும், 'ப்ரஸ்' என்ற ஸ்டிக்கரை, முறைகேடாக ஒட்டி, குழந்தைகளை ஏற்றிச் செல்கின்றன. பெற்றோரும் வாடகை குறைவாக இருந்தால் போதும் என நினைத்து, அதிக குழந்தைகளை ஆட்டோக்காரர் ஏற்றும்போதும் கண்டுகொள்வது இல்லை. சென்றாண்டு, நாகையில் நடந்த வேன் விபத்தின் போது, போக்குவரத்து அதிகாரிகளும், போலீஸாரும் சில நடவடிக்கைகளை எடுத்தனர். அதன் பின், அவை காற்றோடு போயின. மூட்டை முடிச்சுகள் போல குழந்தைகளை அள்ளிச்செல்லும், ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us