/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'குறைந்து வரும் காங்கேயம் கால்நடை எண்ணிக்கை: பந்தயங்களில் காளையை பயன்படுத்தலாம்'

ADDED : ஜன 23, 2025 01:19 AM
'குறைந்து வரும் காங்கேயம் கால்நடை எண்ணிக்கை: பந்தயங்களில் காளையை பயன்படுத்தலாம்'
ஈரோடு,:பாரம்பரியமான காங்கேயம் கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், ரேக்ளா வண்டி போன்ற பந்தயங்களில், பாரம்பரிய காளைகளை பயன்படுத்த, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள, சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கால்நடை மருத்துவர் கந்தசாமி, முனைவர் பன்னீர்செல்வம் போன்றோர் சில ஆண்டுகளுக்கு முன், ஆய்வறிக்கை வெளியிட்டனர். அதில், தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் காங்கேயம் கால்நடைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர். இதையடுத்து, காங்கேயம் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டது.
கடந்த, 17 ஆண்டுகளாக பாரம்பரிய கால்நடை இனத்தை காப்பது, இயற்கை விவசாயம், ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை காக்க சட்ட போராட்டமும் நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின், பல்வேறு முன்னெடுப்பால் பாரம்பரியமான கால்நடைகளின் எண்ணிக்கை மெதுவாக முன்னேறி வருகிறது.
இச்சூழலில், மேற்கு மண்டலமான கொங்கு நாட்டில் ரேக்ளா விளையாட்டுகளை, கர்நாடகாவை சேர்ந்த ஹாலிக்கர், அமிர்த மஹால் போன்ற காளைகளை ஜோடிகளாக வாங்கி வந்து, இங்கு ரேக்ளா வண்டிகளை ஓட்டுவதை சில இடங்களில் காண முடிகிறது. போட்டிகளில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே இவ்வகை காளைகள் பயன்படும். இதை தவிர்த்து, அந்தந்த பகுதியில் உள்ள பாரம்பரிய கால்நடைகளை போட்டிகளில் பங்கேற்ப வைப்பதுதான் சிறந்தது. வெளி மாநிலங்கள், வேறு பகுதிகளில் இருந்து கால்நடைகளை கொண்டு வருவது, நமது பாரம்பரிய கால்நடைகளுக்கு நாம் செய்யும் கேடாகும். எனவே, ரேக்ளா பந்தயங்களில் வெளிமாநில கால்நடைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.