/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிழக்கு தொகுதியில் இன்று ஓட்டுப்பதிவு தெம்புடன் தி.மு.க.,; நம்பிக்கையுடன் நா.த.க.,
/
கிழக்கு தொகுதியில் இன்று ஓட்டுப்பதிவு தெம்புடன் தி.மு.க.,; நம்பிக்கையுடன் நா.த.க.,
கிழக்கு தொகுதியில் இன்று ஓட்டுப்பதிவு தெம்புடன் தி.மு.க.,; நம்பிக்கையுடன் நா.த.க.,
கிழக்கு தொகுதியில் இன்று ஓட்டுப்பதிவு தெம்புடன் தி.மு.க.,; நம்பிக்கையுடன் நா.த.க.,
ADDED : பிப் 05, 2025 01:16 AM
கிழக்கு தொகுதியில் இன்று ஓட்டுப்பதிவு தெம்புடன் தி.மு.க.,; நம்பிக்கையுடன் நா.த.க.,
ஈரோடு, :ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள், நான்கு ஆண்டுக்குள்மூன்றாவது எம்.எல்.ஏ.,வை தேர்வு செய்ய, இன்று ஓட்டுப்
பதிவு செய்யவுள்ளனர்.ஈரோடு கிழக்கு தொகுதியில், 2021 ஏப்.,6ல் பொது சட்டசபை தேர்தல் நடந்தது. காங்., திருமகன் ஈவெரா 62,495 ஓட்டு பெற்று வென்றார். ஓட்டு வித்தியாசம், 8,523. அவர் இறந்ததால், 2023 பிப்., 27ல் இடைத்தேர்தல்
நடந்தது.அதில் போட்டியிட்ட அவரது தந்தை இளங்கோவன், 66,233 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். இந்நிலையில் இளங்கோவனும் இறந்ததால், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இன்று
ஓட்டுப்பதிவு நடக்கிறது.இத்தேர்தலில், ஒரு லட்சத்து, 10,128 ஆண்கள்; ஒரு லட்சத்து, 17,381 பெண்கள்; மூன்றாம் பாலினத்தவர் 37 பேர் என, இரண்டு லட்சத்து, 27,546 பேர் ஓட்டுப்போட தகுதி பெற்றுள்ளனர். தேர்தலில் தி.மு.க., வி.சி.சந்திரகுமார், நா.த.க., சீதாலட்சுமி உட்பட, 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கடந்த, 2021 தேர்தலில் அ.தி.மு.க., ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள், ஆட்சி மாற்றம் எனக்கூறி காங்., வென்றது. 2023ல் திருமகன் ஈவெரா மறைந்த அனுதாபம், அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் மாவட்ட செயலாளர்கள் களமிறக்கப்பட்டதால், வெற்றி வசமானது.
அதேநேரம், 2024, ஏப்., 19ல் நடந்த லோக்சபா தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில், தி.மு.க., 86,646 ஓட்டுகள், அ.தி.மு.க., 34,817 ஓட்டுகள் பெற்றன. இம்முறை தி.மு.க., நா.த.க., தவிர மற்றவர்கள் சுயேட்சை என்பதால், மிக அமைதியான ஓட்டு சேகரிப்புடன், கவனிப்புகள் குறைந்து, அமைச்சர்கள் வருகையின்றி பிரசாரம் அமைந்தது.
மூன்றரை ஆண்டுகால ஆட்சியின் திட்டங்கள், கடைசி நேர கவனிப்பால் தி.மு.க., தெம்பாக உள்ளது. அதேசமயம் பிரசாரத்தை மட்டுமே நம்பி, நா.த.க., முடிவை எதிர்பார்த்துள்ளது.
காங்., வசமிருந்த தொகுதியில் தி.மு.க., பெறும் ஓட்டு, ஆட்சி மீது மக்கள் கொண்டுள்ள எண்ணத்தை பிரதிபலிப்பதாக அமையும். கடந்த இடைத்தேர்தலில், 66,233 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தி.மு.க., கூட்டணி, இரண்டாவது இடைத்தேர்தலில் அதை கடக்குமா அல்லது பின்தங்குமா என்பதே, அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.