/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாயமான பெண் போலீசின் மகன்மாதேஸ்வரன் மலை கோவிலில் மீட்பு
/
மாயமான பெண் போலீசின் மகன்மாதேஸ்வரன் மலை கோவிலில் மீட்பு
மாயமான பெண் போலீசின் மகன்மாதேஸ்வரன் மலை கோவிலில் மீட்பு
மாயமான பெண் போலீசின் மகன்மாதேஸ்வரன் மலை கோவிலில் மீட்பு
ADDED : மார் 02, 2025 01:38 AM
மாயமான பெண் போலீசின் மகன்மாதேஸ்வரன் மலை கோவிலில் மீட்பு
பவானி:அம்மாபேட்டை அருகேயுள்ள குருவரெட்டியூர் அரசமரத்து வீதியை சேர்ந்தவர் நந்தினி, 31; பவானி போலீஸ் ஸ்டேஷன் இரண்டாம் நிலை காவலர். இவரது மகன் ஜருண்ஸ்ரீ, 13; தனியார் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன். கடந்த, 27ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை. பள்ளியில் விசாரித்ததில் இரண்டு நாட்களாக பள்ளிக்கு வராதது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தினி, அம்மாபேட்டை போலீசில் புகாரளித்தார். அந்தியூர் எஸ்,ஐ., கார்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார், மாணவனை தேடினர்.
குருவரெட்டியூரில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்ததில், சேலம் மாவட்டம் கண்ணாமூச்சி செல்லும் அரசு பஸ்ஸில் ஏறி மாணவன் சென்றது தெரிந்தது. அங்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தியதில், பைக்கில் லிப்ட் கேட்டு சென்றதை அறிந்தனர். தொடர் விசாரணைக்குப்பின், கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு சென்றனர்.
அங்கு புத்தகப்பையுடன் அமர்ந்திருந்த மாணவனை கண்டு அழைத்து வந்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'வீட்டில் படிக்குமாறு அடிக்கடி அறிவுரை சொன்னதால், கோபித்து கொண்டு வீட்டை விட்டு மாணவன் வெளியேறினான்' என்றனர். உரிய அறிவுரை வழங்கி, பெற்றோரிடம் மாணவனை ஒப்படைத்தனர்.