/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூவிக்கூவி அழைத்தாலும் சீண்டுவாரில்லை...வணிக வளாக கடை ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு

ADDED : மார் 08, 2025 02:47 AM
கூவிக்கூவி அழைத்தாலும் சீண்டுவாரில்லை...வணிக வளாக கடை ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு
ஈரோடு:ஈரோடு மாநகராட்சி சார்பில், பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, ப.செ.பார்க் கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் முதல் தளத்தில், 34 கடைகள், இரண்டாம் தளத்தில், ௧௦௦ கடைகள், மூன்றாம் தளத்தில், 56 கடைகள் உள்ளன. காந்திஜி சாலை வணிக வளாகத்தில் தரை தளத்தில், ௧௪ கடைகள், முதல் தளத்தில், ௧௫ கடைகள், இரண்டாம் தளத்தில், 7,740 சதுர அடி கடை, மூன்றாம் தளத்தில், 3,832 சதுர அடிக்கு கடைகள் உள்ளன. ஆர்.கே.வி.சாலை நேதாஜி வணிக வளாகத்தில் தரை கீழ் தளம், 46,802 சதுர அடி, தரைத்தளம் 40,204 சதுர அடிக்கு உள்ளது.
ஈரோடு பஸ் ஸ்டாண்டை தவிர மற்ற வணிக வளாக கடைகள், ஏற்கனவே ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிகமான வைப்புத்தொகை, வாடகை நிர்ணயத்தால் ஏலம் எடுக்க யாரும் வராமல் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று வணிக வளாக கடைகளுக்கான பொது ஏலம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில், உதவி ஆணையாளர் அண்ணாதுரை தலைமையிலான குழுவினர் தயாராக இருந்தனர். ஆனால், யாரும் வராததால், ஏலம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதேசமயம் வ.உ.சி., பூங்கா மைதான நேதாஜி தற்காலிக தினசரி காய்கறி சந்தை, மாணிக்கம்பாளையம் வாரச்சந்தையில் கட்டணம் வசூல் உரிமம், நேதாஜி சாலை, தங்க பெருமாள் வீதி, பெரியார் நகரில் வாரச்சந்தைகளில் கட்டணம் வசூலிக்கும் உரிமம், கனிராவுத்தர் குளம் பொதுக்கழிப்பிட கட்டணம் வசூல் உரிமம், ஈரோடு பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ நிறுத்தத்துக்கு கட்டணம் வசூல் உரிமம், காந்திஜி வீதியில் மாநகராட்சி டாக்சி நிறுத்தத்துக்கு கட்டணம் வசூல் உரிமத்துக்கு ஏலம் விடப்பட்டது.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஏலம் விடப்பட்ட விபரங்கள், மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானமாக கொண்டு வரப்படும். அங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு செயல்பாட்டுக்கு வர இருப்பதால், ஏலம் எடுக்கப்பட்ட தொகை குறித்த விபரங்களை தெரிவிக்க முடியாது. இவ்வாறு கூறினர்.