/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பஞ்சு ஏற்றி வந்த லாரி மீதுமின் கம்பி உரசி தீ விபத்து
/
பஞ்சு ஏற்றி வந்த லாரி மீதுமின் கம்பி உரசி தீ விபத்து
பஞ்சு ஏற்றி வந்த லாரி மீதுமின் கம்பி உரசி தீ விபத்து
பஞ்சு ஏற்றி வந்த லாரி மீதுமின் கம்பி உரசி தீ விபத்து
ADDED : மார் 16, 2025 01:31 AM
பஞ்சு ஏற்றி வந்த லாரி மீதுமின் கம்பி உரசி தீ விபத்து
பள்ளிப்பாளையம்:வெப்படை பகுதியில் பஞ்சு ஏற்றிச்சென்ற லாரி மீது மின் கம்பி உரசி தீப்பிடித்ததில், லாரி முற்றிலும் எரிந்து சேதமானது.
சேலம் மாவட்டம், சங்ககிரியில் இருந்து பஞ்சு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று, வெப்படை அடுத்த பாதரை பகுதியில் செயல்படும் நுாற் பாலைக்கு, நேற்று மதியம், 2:00 மணிக்கு சென்று கொண்டிருந்தது. படவீடு பகுதியை சேர்ந்த செல்வராஜ், லாரியை ஓட்டினார். பாதரை பகுதிக்கு லாரி வந்தபோது, சாலையின் குறுக்கே இருந்த மின் கம்பியில் பஞ்சு உரசியது. இதில் தீப்பொறி ஏற்பட்டு, பஞ்சு லோடு தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் செல்வராஜ், லாரியை அருகில் இருந்த காட்டுப்பகுதிக்கு சாமர்த்தியமாக ஓட்டிச்சென்று நிறுத்தினார்.
தகவலறிந்து வந்த வெப்படை தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இருப்பினும், லாரியில் இருந்த பஞ்சு லோடு மற்றும் லாரி முற்றிலும் எரிந்து சேதமானது.