/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானி நதி மாசுபாட்டை குழு அமைத்து கண்காணிக்க கோரி அமைச்சரிடம் மனு
/
பவானி நதி மாசுபாட்டை குழு அமைத்து கண்காணிக்க கோரி அமைச்சரிடம் மனு
பவானி நதி மாசுபாட்டை குழு அமைத்து கண்காணிக்க கோரி அமைச்சரிடம் மனு
பவானி நதி மாசுபாட்டை குழு அமைத்து கண்காணிக்க கோரி அமைச்சரிடம் மனு
ADDED : ஏப் 12, 2025 01:18 AM
பவானி நதி மாசுபாட்டை குழு அமைத்து கண்காணிக்க கோரி அமைச்சரிடம் மனு
ஈரோடு, பவானி நதி பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம், ஒருங்கிணைப்பாளர் நடராஜ் உட்பட பலர், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், ஈரோட்டில் நேற்று மனு வழங்கி கூறியதாவது:
கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் என நான்கு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக பவானி நதி விளங்குகிறது. விவசாயத்துக்கும் பயன்படுத்துகின்றனர். இந்நதி நீர், ஆலைக்கழிவால் மாசடைந்து நிறம் மாறி துர்நாற்ம் வீசுகிறது. தமிழகத்தில் புற்றுநோய் அதிகம் உள்ள மாவட்டமாக ஈரோடு உள்ளது. இந்நிலையில் பவானி நதியை காக்க, சத்தியமங்கலத்தில் அனைத்து கட்சி, பொதுநல அமைப்புகள் கூடி, 2023ல் இக்கூட்டியக்கத்தை ஏற்படுத்தியது. பவானிசாகரில் கூட்டியக்கம் சார்பில் நதியை காக்க போராட்டம் நடத்தப்பட்டது.
சமீபமாக கோவை மாவட்டம் சிறுமுகை, ஆலந்துறையில் நீரின் நிறம் ஆரஞ்சு நிறமானதால், கோவை மாவட்ட
நிர்வாகம் குடிநீரை பயன்படுத்த தடை விதித்தது. அப்போதும் போராடினோம். பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைந்ததும், நதி நீர் ஆரஞ்சு நிறமாக மாறி, துர்நாற்றம் வீசுகிறது. எனவே பவானி நதியில் மாசு ஏற்படுத்தும் ஆலைகள், நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அனைத்து துறை, பொது அமைப்புகள் இணைந்த கண்காணிப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.