/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விற்பனை வரி குழு துவக்க வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மனு
/
விற்பனை வரி குழு துவக்க வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மனு
விற்பனை வரி குழு துவக்க வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மனு
விற்பனை வரி குழு துவக்க வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மனு
ADDED : ஜூலை 14, 2011 01:33 AM
ஈரோடு: 'ஒவ்வொரு மாவட்டத்திலும் விற்பனை வரி ஆலோசனைக் குழு துவக்க வேண்டும்' என, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவனேசன், வணிக வரித்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் அனுப்பியுள்ள மனு: ஒவ்வொரு பட்ஜெட் சமர்ப்பிக்கும் முன், நடத்தப்படும் ஆலோசனை கூட்டத்தை இந்தாண்டும் நடத்தி, தொழில் முனைவோர், வணிகர்களின் வேண்டுகோளை கேட்டு, பட்ஜெட் சமர்ப்பிக்க வேண்டும். மதிப்பு கூடுதல் வரியில் தற்சமயம் நான்கு சதவீதம் மற்றும் 12.5 சதவீதம் என, இரு வேறு விதங்கள் உள்ளன. இதற்கிடையில் எட்டு சதவீதம் வரி விதிப்பு ஒன்று உருவாக்கப்பட்டு, வரி விகிதம் சில அத்தியாவசிய பொருட்களுக்கு குறைக்க வேண்டும். பெட்ரோல், டீஸல் இரண்டையும் மதிப்பு கூடுதல் வரி பிரிவின் கீழ் 12.5 சதவீதம் வரி விதிப்பில் கொண்டு வர வேண்டும். கோன் நூலுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். ஜவுளி சார்ந்த உப தொழிலான சாயமிடுதல் மற்றும் கஞ்சி வார்த்தல்(சைசிங்) மீதான ஒப்பந்த பணி வரியை நீக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் உள்ள போல், மின் சாதனங்கள் மீதான வரியை எட்டு சதவீதத்துக்கு மிகாமல் மாற்ற வேண்டும். கையடக்க குழல்விளக்குகளின் மீதான வரி தற்சமயம் 12.5 சதவீதமாக உள்ளதை நான்கு சதவீதமாக குறைக்க வேண்டும். 500 ரூபாய் வரையான செருப்புக்கு விற்பனை வரி விலக்கு அளிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் விற்பனை வரி ஆலோசனை குழு துவக்கப்பட்டு, மூன்று மாதத்துக்கு ஒரு முறை கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். தமிழ்நாடு வணிகர் நல வாரியம் மாற்றியமைக்கப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

