/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உயர்த்திய சொத்து வரியை திரும்ப பெற வலியுறுத்தல்
/
உயர்த்திய சொத்து வரியை திரும்ப பெற வலியுறுத்தல்
ADDED : அக் 20, 2024 01:56 AM
உயர்த்திய சொத்து வரியை
திரும்ப பெற வலியுறுத்தல்
ஈரோடு, அக். 20-
ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல வாழ்வு சங்க கூட்டம் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. சரவணன் வரவேற்றார். செயலாளர் பாரதி, தீர்மானம் படித்தார். நுகர்வோர் பாதுகாப்பு மைய மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், சிவபிரகாசம், தேவராஜன் பேசினர்.
தமிழக அரசு, ஈரோடு மாநகராட்சி நிர்வாகமும் கடந்தாண்டு வீட்டு வரி, சொத்து வரியை, 100 சதவீதம் உயர்த்திய நிலையில், ஆண்டு தோறும், 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படும் என அறிவித்துள்ளனர். இதை திரும்ப பெற வேண்டும். முதல்வரின் தேர்தல் வாக்குறுதிப்படி குப்பை வரியை நீக்க வேண்டும் என்பது உள்பட தீர்மானம் நிறைவேற்றினர்.