/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காய்கறி மார்க்கெட்டில் சுகாதார சூழல்வியாபாரிகளிடம் தி.மு.க., வேட்பாளர் உறுதி
/
காய்கறி மார்க்கெட்டில் சுகாதார சூழல்வியாபாரிகளிடம் தி.மு.க., வேட்பாளர் உறுதி
காய்கறி மார்க்கெட்டில் சுகாதார சூழல்வியாபாரிகளிடம் தி.மு.க., வேட்பாளர் உறுதி
காய்கறி மார்க்கெட்டில் சுகாதார சூழல்வியாபாரிகளிடம் தி.மு.க., வேட்பாளர் உறுதி
ADDED : பிப் 01, 2025 01:08 AM
காய்கறி மார்க்கெட்டில் சுகாதார சூழல்வியாபாரிகளிடம் தி.மு.க., வேட்பாளர் உறுதி
ஈரோடு, :ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், அமைச்சர் முத்துசாமி வழிகாட்டுதலின்படி, வ.உ.சி., பூங்கா வளாகத்தில் உள்ள நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் ஓட்டு சேகரிப்பில் நேற்று ஈடுபட்டார்.
மார்க்கெட்டில் மழை காலங்களில் நீர் வெளியேற வழியின்றி சேரும், சகதியுமாக மாறுவதை தடுக்க, வடிகால் வசதி ஏற்படுத்தி, கான்கிரீட் தளத்துடன் சுகாதாரமான சூழலுடன் அமைக்கப்படும். வியாபாரிகள், இங்கு வருவோர் பயன்படுத்தும் வகையில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படும். மாநகருக்குள் மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், காய்கறி, பழங்கள், கறி, மீன் விற்பனையை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மார்க்கெட் வியாபாரிகளுக்கு வசதியாக ஏற்படுத்தப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட வணிக மைய கட்டடங்களை, பழைய வணிகர்களுக்கே முன்னுரிமைப்படி வழங்க, குறைந்த வாடகையில் ஏலம் வழங்கவும் முயற்சி செய்து தரப்படும்.
இங்கு தெரிவிக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை அமைச்சர் முத்துசாமி மேற்கொண்டு வருகிறார். அவர் மூலம் அரசிடம் தெரிவித்து விரைவுபடுத்தப்படும் என்று, வேட்பாளர் சந்திரகுமார் உறுதியளித்தார். மார்க்கெட் வியாபாரிகள், அங்கு வந்து மக்கள் தெரிவித்த கோரிக்கைகளை வேட்பாளர் பெற்று கொண்டு, நடவடிக்கை எடுக்க முயல்வதாக தெரிவித்தார்.
வேட்பாளருடன் மாநில விவசாய அணி இணை செயலாளர் குறிஞ்சி சிவகுமார், மண்டல தலைவர் காட்டு சுப்பு என்ற சுப்பிரமணியம், கோட்டை பகுதி செயலாளர் ராமசந்திரன், மாநகர விவசாய அணி துணை செயலாளர் அருண், கவுன்சிலர் பழனியப்பா செந்தில் உடனிருந்தனர்.
போலீஸ் மீது நா.த.க., புகார்
தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்திடம், நா.த.க., முதன்மை முகவர் நவநீதன் மற்றும் நிர்வாகிகள் புகார் மனு வழங்கி கூறியதாவது: இடைத்தேர்தலில், 31ம் இரவு, 7:00 மணி முதல், 10:00 மணி வரை திருநகர் காலனியில் பொதுக்கூட்டம் நடத்த, அனுமதி வழங்க கேட்டு விண்ணப்பித்து இருந்தோம். அனுமதி வழங்குவதாகவும், சி.ஐ.எஸ்.எப்., காவலர்கள் பாதுகாப்பு வழங்குவதாகவும் உறுதியளித்து அனுமதித்தீர்கள். ஆனால் அவ்விடத்தில் மேடை அமைக்கும் பணி நடந்தபோது, கருங்கல்பாளையம் போலீசார் வந்து, 'இங்கு கூட்டம் நடத்த அனுமதி இல்லை. மேடை அமைக்கக்கூடாது. கூட்டம் நடத்தினால் தி.மு.க.,வினர் பிரச்னை செய்வார்கள்' எனக்கூறி, வாய்மொழியாக கூறி மிரட்டினர். தேர்தலில் போலீசார் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளனர்.