/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலையில் இன்றிரவுதைப்பூச மகா தரிசனம்லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்

ADDED : பிப் 15, 2025 01:32 AM
சென்னிமலையில் இன்றிரவுதைப்பூச மகா தரிசனம்லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சென்னிமலை : சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழா முக்கிய நிகழ்ச்சியான மகா தரிசனம் இன்றிரவு நடக்கிறது.
சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழா கடந்த, 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின் பல்லக்கு சேவை, மயில் வாகன காட்சி, யானை வாகனகாட்சி, பஞ்சமூர்த்தி புறப்பாடு, தேரோட்டம், குதிரை வாகன காட்சி, பரிவேட்டை, தெப்போற்சவம் என தொடர்ந்து விழா நடந்தது. விழா முக்கிய நிகழ்வான மகாதரிசனம் நிகழ்ச்சி இன்று இரவு நடக்கிறது. முன்னதாக சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு மகா சிறப்பு அபிஷேகம், அதை தொடர்ந்து மூன்று டன் மலர்களால் புஷ்பாஞ்சலி நடக்கும்.
இரவு, 8:00 மணிக்கு நடராஜ பெருமானும், சுப்பிரமணிய சுவாமியும் வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வருவர். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு விடிய, விடிய தரிசனம் செய்வர். விழாவையொட்டி நான்கு ராஜவீதிகளிலும் நாதஸ்வர தவிலிசை கச்சேரி நடக்கிறது. அதிகாலையில் கைலாசநாதர் கோவிலுக்குள் சென்றடையும். நாளை மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், 15 நாள் தேர் திருவிழா நிறைவுக்கு வருகிறது.