/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தீ விபத்து
/
காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தீ விபத்து
காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தீ விபத்து
காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தீ விபத்து
ADDED : பிப் 21, 2025 12:49 AM
காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தீ விபத்து
பவானிசாகர்: காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மரம், செடி கொடிகள் எரிந்து சாம்பலானது.
பவானிசாகரை அடுத்த பகுத்தம்பாளையத்தில், காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையம் உள்ளது. வளாகத்தில். 10 ஏக்கர் பரப்பளவில் மரம் செடி, கொடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. போதிய மழை இல்லாததால் இவை காய்ந்து
காணப்படுகிறது. நேற்று மதியம் காய்ந்த புற்களில் தீப்பிடித்தது. காற்றும் வீசியதால் மரம், செடி, கொடிகளில் தீ மளமளவென பற்றி பரவியது. இதில் புல்வெளி, காய்ந்த மரம், செடி, கொடிகள் எரிந்து சாம்பலாகின. அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறியது. சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து, பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.