/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இடம் மாறினாலும் மனம் மாறலஉ.பி.,க்கு பறந்த சிறுவன் மீட்பு
/
இடம் மாறினாலும் மனம் மாறலஉ.பி.,க்கு பறந்த சிறுவன் மீட்பு
இடம் மாறினாலும் மனம் மாறலஉ.பி.,க்கு பறந்த சிறுவன் மீட்பு
இடம் மாறினாலும் மனம் மாறலஉ.பி.,க்கு பறந்த சிறுவன் மீட்பு
ADDED : பிப் 21, 2025 12:51 AM
இடம் மாறினாலும் மனம் மாறலஉ.பி.,க்கு பறந்த சிறுவன் மீட்பு
ஈரோடு:ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, 16 வயது சிறுவன் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
எந்நேரமும் மொபைல் போன் விளையாட்டு விளையாடியதால், ஈரோட்டில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு கொண்டு வந்து விட்டனர். இங்கும் விளையாடுவதை நிறுத்தாததால் உறவினர் கண்டித்துள்ளனர். இதனால் மொபைல்போனுடன் மாயமானார். உறவினர்கள் கருங்கல்பாளையம் போலீசில் புகாரளித்தனர்.
கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மொபைல் போன் டவர் மூலமாக நடத்தப்பட்ட விசாரணையில், ஈரோட்டில் இருந்து சங்ககிரிக்கு சென்று, அங்கிருந்து பெங்களூருவுக்கு ரயிலில் சென்றதும், அங்கிருந்து உ.பி., மாநிலத்துக்கு ரயிலில் சென்றதும் தெரியவந்தது. அங்கு ஒரு ஆசிரமத்தில் தங்கியிருப்பதை அறிந்துகொண்ட போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுத்து சிறுவனை மீட்டு ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர்.
சமூக வலைதளத்தில் வந்த ஒரு வீடியோவில், உ.பி., மாநிலத்தில் உள்ள சாமியார் தொடர்பான தகவல்களை தெரிந்து கொண்டு, அவரை பார்ப்பதற்காக சென்றாக சிறுவன் தெரிவித்துள்ளார். அறிவுரை வழங்கிய போலீசார், உறவினர்களிடம் சிறுவனை ஒப்படைத்தனர்.