/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு கலை அறிவியல் கல்லுாரியில்தணிக்கையாளர்கள் பாராட்டு விழா
/
ஈரோடு கலை அறிவியல் கல்லுாரியில்தணிக்கையாளர்கள் பாராட்டு விழா
ஈரோடு கலை அறிவியல் கல்லுாரியில்தணிக்கையாளர்கள் பாராட்டு விழா
ஈரோடு கலை அறிவியல் கல்லுாரியில்தணிக்கையாளர்கள் பாராட்டு விழா
ADDED : பிப் 27, 2025 02:16 AM
ஈரோடு கலை அறிவியல் கல்லுாரியில்தணிக்கையாளர்கள் பாராட்டு விழா
ஈரோடு, ஈரோடு, ரங்கம்பாளையம் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தொழில்முறை கணக்கியல் துறை சார்பாக தணிக்கையாளர்கள் பாராட்டு விழா நடந்தது.
விழாவிற்கு முதலியார் எஜுகேசனல் டிரஸ்ட் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். செயலர் மற்றும் தாளாளர் பாலுசாமி முன்னிலை வகித்து பேசினார். கல்லுாரி முதல்வர் சங்கரசுப்பிரமணியன், இயக்குனர் வெங்கடாசலம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொழில் முறை கணக்கியல் துறையில், 21 - தணிக்கையாளர்களின் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. மூன்றாமாண்டு மாணவர்கள், நிறுவன தணிக்கையாளர்களின் தொழில்முறை பயிற்சிக்காக, 45- நாட்கள் பயிற்சி எடுத்துள்ளனர். அதன் பொருட்டு, பட்டைய கணக்காளர்களுக்கு கல்லுாரி சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில், தொழில்முறை கணக்கியல் துறையின் உதவி பேராசிரியர் தலைவர் பியூலா வரவேற்றார். அசோகன், ஹரிகேசவன், தங்கவேல், பாலமுருகன், கார்த்திகேயன், சத்தியமூர்த்தி, அசோக் ஏற்புரை வழங்கினர். உதவி பேராசிரியர் திவ்யா நன்றி கூறினார். பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.