/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரயத்து பட்டா நிறுத்த மனுக்கள் மீதுவிசாரணை தொடக்கம்; டி.ஆர்.ஓ.,
/
ரயத்து பட்டா நிறுத்த மனுக்கள் மீதுவிசாரணை தொடக்கம்; டி.ஆர்.ஓ.,
ரயத்து பட்டா நிறுத்த மனுக்கள் மீதுவிசாரணை தொடக்கம்; டி.ஆர்.ஓ.,
ரயத்து பட்டா நிறுத்த மனுக்கள் மீதுவிசாரணை தொடக்கம்; டி.ஆர்.ஓ.,
ADDED : மார் 02, 2025 01:38 AM
ரயத்து பட்டா நிறுத்த மனுக்கள் மீதுவிசாரணை தொடக்கம்; டி.ஆர்.ஓ.,
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் ரயத்து பட்டா நிறுத்தம், நத்தம் நிறுத்தம் குறித்த மனுக்கள் மீது விசாரணை தொடங்கியுள்ளது.
ஈரோடு மாநகராட்சி பகுதி உட்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரயத்து பட்டா, நத்தம் பட்டா நிறுத்தம் போன்ற பிரச்னைகள் உள்ளன. இதுபற்றி டி.ஆர்.ஓ., சாந்தகுமார் கூறியதாவது:
பல ஆண்டுகளுக்கு முன்பிருந்து வசித்து வருவோர் இடங்களுக்கு முறையாக பட்டா இருக்காது. அவற்றை விற்பனை செய்யும்போதும், பட்டா கோரி விண்ணப்பம் செய்தல், பட்டா உட்பிரிவுக்கு முயலும்போதும், அவை, 'ரயத்து பட்டா, நத்தம் பட்டா நிறுத்தம்' என்ற பெயரில் இருப்பது தெரியவரும். அவற்றை முறையாக விண்ணப்பித்து பட்டா பெறலாம். இவ்வாறு சில ஆயிரம் இனங்கள் உள்ளதால், அரசு உத்தரவுப்படி சில முறை முகாம்கள் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடங்களில் நடத்தப்பட்டது. அங்கு விண்ணப்பம் செய்ய குறைவானவர்களே வந்தனர்.
தற்போது அந்தந்த பகுதி வி.ஏ.ஓ.,க்கள், தாசில்தார்களிடம் விண்ணப்பித்து, பிரச்னைக்கு தீர்வு பெற யோசனை தெரிவித்துள்ளோம். இதனால் சில ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ரத்து உத்தரவை ஆர்.டி.ஓ.,க்களே செய்ய முடியும் என்பதால், ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு கூடுதல் பணியாளர்கள் கேட்டுள்ளோம். அவர்கள் கூடுதல் ஆட்கள் தேவை என கூறினால், அதற்கான ஆட்களை ஒதுக்கீடு செய்து, விரைவாக இப்பிரச்னைக்கு தீர்வு காண்கிறோம். இவ்வாறு கூறினார்.