/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தெருநாய் கடிக்கு அரசு நிவாரணம்: சந்தை மதிப்பீட்டில் வழங்க கடிதம்
/
தெருநாய் கடிக்கு அரசு நிவாரணம்: சந்தை மதிப்பீட்டில் வழங்க கடிதம்
தெருநாய் கடிக்கு அரசு நிவாரணம்: சந்தை மதிப்பீட்டில் வழங்க கடிதம்
தெருநாய் கடிக்கு அரசு நிவாரணம்: சந்தை மதிப்பீட்டில் வழங்க கடிதம்
ADDED : மார் 22, 2025 01:16 AM
தெருநாய் கடிக்கு அரசு நிவாரணம்: சந்தை மதிப்பீட்டில் வழங்க கடிதம்
ஈரோடு:ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில், சென்னிமலை, பெருந்துறை பகுதி மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களில், 1,800க்கும் மேற்பட்ட ஆடுகள், மாடுகள், கோழிகளை தெருநாய், வெறிநாய்கள் தின்றும், கடித்தும் கொன்றன.
இவற்றுக்கு இழப்பீடு கேட்டு கால்நடை வளர்ப்போர் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தெரு நாய் கடித்து இறந்தால் மாடுகளுக்கு, 37,500 ரூபாய், ஆட்டுக்கு, 6,000 ரூபாய், கோழிக்கு, 200 ரூபாய் நிவாரணமாக அரசு அறிவித்தது. இதை உயர்த்தி வழங்க, காஞ்சிகோவில் பகுதியினர் ஈரோடு கலெக்டர் மூலமும், நேரடியாகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதில் 'இறந்த கால்நடைகளுக்கு அரசு அறிவித்த நிவாரணம் போதுமானதல்ல. சந்தை மதிப்பை கணக்கிட்டு கோழிகளுக்கு, 400 முதல், 500 ரூபாய்; மாட்டுக்கு, 60,000 முதல், 70,000 ரூபாய்; ஆட்டுக்கு, 15,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை வழங்க வேண்டும். கால்நடைகள் இறந்ததை உறுதிப்படுத்திய ஓரிரு நாளில் வழங்க வேண்டும். தாமதம் செய்யக்கூடாது' என தெரிவித்துள்ளனர்.