/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெள்ளகோவிலில் நாய்கள் கடித்ததில் 2 ஆடுகள் பலி
/
வெள்ளகோவிலில் நாய்கள் கடித்ததில் 2 ஆடுகள் பலி
ADDED : பிப் 22, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: வெள்ளகோவில், சேனாபதிபாளையம், ஏக்கத்தான்காடு, வேப்-பங்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி, 40 செம்ம-றியாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை பட்டியில் திடீ-ரென ஆடுகள் போட்ட சத்தத்தை கேட்டு சென்றார்.
இரண்டு ஆடுகள் இறந்து கிடந்தன. இரு குட்டிகள் உயிருக்கு போராடிய-படி கிடந்தது. பட்டிக்குள் புகுந்து நாய்கள் கடித்தது தெரியவந்-தது. கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்த நிலையில், இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

