/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அத்தாணி வன குட்டையில் திருட்டுத்தனமாக மீன் பிடி தொழில் வலையில் சிக்கி இறந்த ஆசாமியால் அம்பலம்

ADDED : பிப் 25, 2025 06:16 AM
அந்தியூர்: அந்தியூர் வனச்சரகம் அத்தாணி கிழக்கு பாரஸ்ட் பீட், வனக்-கோம்பை தண்ணீர் பள்ளம் ஏரியில், நேற்று காலை ஆண் சடலம் மிதந்தது. அப்பகுதி மக்கள் தகவலின்படி சென்ற அந்தியூர் வனத்-துறையினர் பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.
இதில் அத்தாணி காலனியை சேர்ந்த குருசாமி, 38, என்பது தெரிந்தது. இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனர். மீன் பிடித்து விற்பனை செய்து வந்துள்ளார். நீச்சல் தெரியாத நிலையில், தண்ணீர்பள்ளம் ஏரியில் இரவில் மீன் பிடிக்க செல்வாராம். இதன்படி கடந்த, ௨௨ம் தேதி இரவு சென்-றவர் ஏரியில் மூழ்கி பலியாகி விட்டார். இடுப்பில் தெர்மாகோல் அட்டையை கட்டிக்கொண்டு மீன் பிடித்துள்ளார். ஆனால், ஏரியில் விரிக்கப்பட்டிருந்த வலையில் எதிர்பாராதவிதமாக சிக்கி தண்ணீரில் விழுந்துள்ளார். அப்போது போதையில் இருந்ததால், தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டதும், போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. குருசாமி பலியானதன் மூலம், வனப்பகுதி ஏரியில் திருட்டுத்தனமாக மீன் பிடித்து பலர் தொழில் செய்வது தெரிய வந்துள்ளது. வனத்துறையினருக்கு தெரியாமல் இது நடப்-பது சாத்தியமில்லை. ஏரியில் மீன் பிடித்தலில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும். உடந்தையாக இருந்த வனத்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.