/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு ரூ.408 கோடிக்கு மஞ்சள் விற்பனை
/
ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு ரூ.408 கோடிக்கு மஞ்சள் விற்பனை
ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு ரூ.408 கோடிக்கு மஞ்சள் விற்பனை
ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு ரூ.408 கோடிக்கு மஞ்சள் விற்பனை
ADDED : மார் 02, 2025 07:05 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நான்கு மார்க்கெட்டில் கடந்தாண்டு, 408 கோடி ரூபாய் மதிப்பில் மஞ்சள் விற்பனையானது.
தேசிய அளவில் மஞ்சள் சாகுபடியில், தமிழகம் மூன்றாமி-டத்தில் உள்ளது. தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. ஈரோடு பகுதியில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திலும், ஈரோடு மற்றும் கோபி சொசைட்-டியிலும் திங்கள் முதல் வெள்ளி வரை, மஞ்சள் ஏல விற்பனை நடக்கிறது.
ஈரோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்-துக்கு கடந்தாண்டு, 1.10 லட்சம் மூட்டை மஞ்சள் விற்பனைக்கு வரத்தாகி, 80,181 குவிண்டால் விற்பனையானது. இதன் மதிப்பு, 106 கோடியே, 99 லட்சம்.கோபி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்-துக்கு, 20,127 மூட்டை வரத்தாகி, 18,294 மூட்டை மஞ்சள், 16 கோடியே, 58 லட்சத்து, 51,284 ரூபாய்க்கு விற்பனையானது.பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, ஒரு லட்-சத்து, 2,608 மூட்டை வரத்தாகி, 60,025 குவிண்டால், 78 கோடியே, 40 லட்சத்து, 28,716 ரூபாய்க்கு விலை போனது. ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு ஒன்பது லட்சத்து, 32,742 மூட்டை மஞ்சள் வரத்தாகி, 205 கோடியே, 97 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. நான்கு மார்க்கெட்டுகளிலும் கடந்-தாண்டில், 11 லட்சத்து, 65,477 மூட்டை மஞ்சள் வரத்தாகி, 4 லட்சத்து, 38,274 மூட்டை மஞ்சள், 407 கோடியே, 96 லட்சத்து, 30,928 ரூபாய்க்கு ஏலம் போனது.