/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டு பணி மேற்கொள்ள ஒருங்கிணைப்பு கூட்டம்
/
பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டு பணி மேற்கொள்ள ஒருங்கிணைப்பு கூட்டம்
பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டு பணி மேற்கொள்ள ஒருங்கிணைப்பு கூட்டம்
பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டு பணி மேற்கொள்ள ஒருங்கிணைப்பு கூட்டம்
ADDED : ஆக 08, 2024 01:40 AM
ஈரோடு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனுார் வனக்கோட்டத்தில் கால நிலை மாற்றத்துக்கான தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தில், பட்டியல் பழங்குடியினர் வாழும் கிராமங்களில், 21 சூழல் மேம்பாட்டு குழு அமைக்கப்பட்டு செயல்படுகிறது.
இத்திட்டக்குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி, சமுதாய வாழ்வாதார மேம்பாட்டு பணிகள், தனி நபர் தொழில் துவங்குவதற்கான இயந்திரங்கள் வழங்குதல், சிறு தொழில் துவங்க தனி நபர், குழுக்களுக்கான நிதியுதவி போன்ற பணிகள் நடக்கிறது.பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து, அத்துறை சார்ந்த அலுவலர்களை கொண்டு குழு உறுப்பினர்கள் பயனடையும் வகையில் விழிப்புணர்வு கூட்டங்கள், அவ்வப்போது வனத்துறையால் நடத்தப்படுகிறது. இதன்படி, ஆசனுார் வனக்கோட்ட அலுவலகத்தில் பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள பல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம், ஆசனுார் வனக்கோட்ட துணை இயக்குனர் சுதாகர் தலைமையில் நடந்தது.
ஒவ்வொரு துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பயனாளிகளின் தகுதி, நிதியுதவி, தனி நபர் மற்றும் குழுக்களுக்கான திட்டங்கள், மானிய விபரம் தெரிவித்தனர். பின் அக்குழுவினரின் கோரிக்கைகளை சேகரித்தனர்.
பழங்குடியினருக்கு நிலம் வாங்கி தருதல், தேநீர் கடை, உணவகம் அமைத்தல், அழகு கலை நிலையங்கள், தேனீ பெட்டி வழங்குதல், கறவை மாடு கடன், தையல் இயந்திரங்கள், ேஷர் ஆட்டோ, கல்யாண சமையல் பாத்திரங்கள், ஷாமியானா பந்தல், பேண்டு வாத்திய இசை கருவிகள், கட்டை மீன் வளர்ப்பு, பாக்கு மட்டை தயாரிப்பு, சூரிய மின் மோட்டார் மூலம் இயங்கும் ஆழ்துளை கிணறு, கட்டட கட்டுமான பொருட்கள், இலகு ரக வாகனங்கள், மளிகைக்கடை உட்பட பல்வேறு திட்டங்கள் பற்றி விளக்கி, பயன் பெற கேட்டு கொண்டனர்.
பெறப்பட்ட மனுக்கள், அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைத்தனர். ஆசனுார் சூழல் மேம்பாட்டு சரக வனச்சரக அலுவலர் வெங்கடாசலம், வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் சதீஷ், தாட்கோ மாவட்ட மேலாளர் அர்ஜூன், சுடர் அமைப்பு நிறுவனர் நடராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.