/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் ஆஞ்சநேயர் கோவில் ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றம்
/
ஈரோட்டில் ஆஞ்சநேயர் கோவில் ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றம்
ஈரோட்டில் ஆஞ்சநேயர் கோவில் ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றம்
ஈரோட்டில் ஆஞ்சநேயர் கோவில் ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றம்
ADDED : அக் 20, 2024 01:28 AM
ஈரோட்டில் ஆஞ்சநேயர் கோவில்
ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றம்
ஈரோடு, அக். 20-
ஈரோடு, கள்ளுக்கடைமேடு பகுதியில் உள்ள ராமபக்த ஆஞ்சநேயர் கோவில், மாநகராட்சி மற்றும் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று முன்தினம் கோவிலை இடித்து அகற்றும் பணி துவங்கியது. போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டடங்களை இடித்து அகற்றினர். இரண்டாவது நாளாக நேற்றும் பணி தொடர்ந்து. இதில் கோவில் ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்பட்டது. அதேசமயம் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், விநாயகர் சிலைகளை அகற்ற, கோவில் நிர்வாகம் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இன்று அதிகாலை சிறப்பு பூஜைகள் செய்து, சுவாமி சிலைகளை அகற்ற கோவில் தரப்பினர் திட்டமிட்டுள்ளனர் அதை தொடர்ந்து அப்பகுதியும் முழுமையாக அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.