/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீட்டு உபயோக பொருள் கண்காட்சி நாளை நிறைவு
/
வீட்டு உபயோக பொருள் கண்காட்சி நாளை நிறைவு
ADDED : ஜன 18, 2025 01:31 AM
வீட்டு உபயோக பொருள் கண்காட்சி நாளை நிறைவு
ஈரோடு, : ஈரோட்டில் பெருந்துறை ரோடு, பரிமளம் மஹாலில், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பொழுது போக்கு கண்காட்சி கடந்த, 11ம் தேதி தொடங்கியது. நாளை நிறைவடைகிறது.
கண்காட்சியில் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், வீட்டுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள், பெண்களை கவரும் லேட்டஸ்ட் மாடல் ஜவுளி ரகங்கள், ரெடிமேட் ஆடைகள், அழகு சாதன பொருட்கள், குழந்தைகளை கவரும் விளையாட்டு அரங்குகள் மற்றும் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள், ஒரே இடத்தில் அமைந்துள்ளன. கண்காட்சியில், 200க்கும் மேற்பட்ட கேரளா தேக்கு பர்னிச்சர், 70 சதவீதம் தள்ளுபடி விலையில் இலவச டோர் டெலிவரியுடன் விற்பனை செய்யப்படுகிறது.
டாடா கார்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் பல்வேறு வகையான பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாக, கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அமானுல்லா கூறினார்.