/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மகன் கண்டிப்பு 'போதை' தந்தை தற்கொலை
/
மகன் கண்டிப்பு 'போதை' தந்தை தற்கொலை
ADDED : ஜன 18, 2025 01:35 AM
பெருந்துறை, : வீட்டில் மது அருந்திய போது, பாட்டிலை மகன் பறித்து உடைத்ததால், மன வேதனையில் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
பெருந்துறையை அடுத்த பாலக்கரை, தொட்டியனுாரை சேர்ந்தவர் செல்வராஜ், 55; விவசாயி. மது குடிக்கும் பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் மது குடித்தார்.
இதைபார்த்த இளையமகன் விஜயகுமார், வீட்டில் மது அருந்தக் கூடாது என்று கூறி, பாட்டிலை எடுத்து உடைத்து விட்டார்.
இதனால் கோபித்து கொண்டு தோட்டத்துக்கு சென்றவர், செல்பாஸ் மாத்திரையை தின்று விட்டார். சிறிது நேரம் கழித்த பிறகே தெரிய வந்தது.
ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.